பரிசுத்த தேவனின் பிரசன்னம்
parisutha devanin pirasannam
பரிசுத்த தேவனின் பிரசன்னம் நம்மில் இறங்கியே வந்துவிட்டதே தேவன் நம்மில் அசைவாடுகின்றார் நம் துதிகளில் வாசம் செய்யவே – 2
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர் நம் துதியை விரும்பியே வந்திருக்கிறார் நம் மகிமையின் மாசற்ற தேவனையே மகிழ்ந்து உற்ச்சாகமாய் துதித்திடுவோம் -2
2. நிகரில்லா நித்திய தேவனையே நித்தமும் பணிந்து தொழுதிடுவோம் நம் பரிசுத்த தேவனின் நாமத்தையே நடுங்கி பயத்துடன் தொழுதிடுவோம் -2