பரிசுத்த ஆவியை எங்கள்
parisutha aaviyai engal
பரிசுத்த ஆவியை எங்கள் மீதிலே பரிசுத்த தேவனே பொழிந்தருளும்
1.இரண்டு மூன்று பேர் கூடுமிடத்தில் இருக்கிறேன் என்று நீர் உரைத்தீர் இயேசுவின் இன்ப வாக்கை நம்பி இருக்கிறேன் இந்த வேளையிலே
2.அசுத்த உதடுள்ள மனுஷன் நான் அசுத்தஜனம் நடுவில் வாசம்செய்பவன் அக்கினி தழலினால் எந்தன் நாவை அக்கிரம் நீங்க சுத்திகரியும்
3.மாம்சமான யாவர் மேலும் அக்கினி ஆவியை ஊற்றுவேனென்றீர் வாலிபர் தரிசனங்கள் சொல்லுவார் மூப்பர்கள் சொப்பனங்களை காணுவார்
4.நம்பிக்கை உடைய சிறைகளே இரட்டிப்பு நன்மையை தருவேனென்றீர் இன்றைக்கே வரங்களால் நிரம்பிஎம்மை நன்மையினால் வழி நடத்திடுமே