பரிசுத்த ஆவியே
parisutha aaviyae
பரிசுத்த ஆவியே ஊற்றிடுமே பரலோக வல்லமையை தந்திடுமே ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே வல்லமை இரட்டிப்பாய் பொழிந்திடுமே
ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே
ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே ஜெப வீரனாக மாற்றிடுமே -(2) முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே அழுது ஜெபிக்க கிருபை தாரும்
ஏனோக்கு உம்மோடு நடந்தது போல ஆவியில் உம்மோடு நடக்கணுமே இயேசுவைப் போல மாறணுமே கதறி அழுது ஜெபிக்கனுமே -(2)