பரிசுத்த ஆண்டவரே
parisutha aandavarae
பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள் கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன் உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன் கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே
உமது அடிச்சுவட்டில் புதிய வாழ்வைத் தொடங்குகிறேன் சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஜயா
இறப்பின் விடுதலையை உலகில் மெய்ப்பித்த இரட்சகரே தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே
வேதத்தின் பொருள் நீரே ஜீவ நாதத்தின் ஒளி நீரே பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே தவத்தின் தலைவராகி எம்மைத் காத்திட வந்தவரே உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ
மந்தைக் கூட்டத்துக்குள் நானும் சிந்தையைப் பறிகொடுத்தேன் தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஜயா
மன்னுயிர் காத்திடவே செஞ்சிலுவை சுமந்தவரே என்னுயிர் நீரே ஜயா இயேசு நாதனே நேசிக்கிறேன்