பரிகாரியாகிய பரிசுத்தர்
parigaariyaagiya parisuthar
பரிகாரியாகிய பரிசுத்தர் இயேசு சுகம் அளிப்பவர் என்றறிந்திடுவாய் நோய்களை நீக்கி பிராணனைக் காப்பவர் இயேசுவை அன்றி ஒருவரும் இல்லையே
மானிடர்க்காக மானிடனாக மகிமையின் தேவன் உதித்தனரே மானிலம் தனிலே வல்லமையோடு சுகம் அளிப்பவராய்க் கிரியை செய்தனரே
அசுத்த ஆவிகள் அனைத்தையும் துரத்தி சகல நோய்களையும் குணமாக்கினார் செவிடர்கள் கேட்கவும் ஊமையர் பேசவும் முடவர்கள் குதிக்கவும் குணமாக்கினாரே
சந்திரரோகத்தைக் குணமாக்கினாரே சத்திய பரனாம் இயேசு தேவன் அற்புத சுகத்தை அளித்தனர் அவரே அற்புதர் அவர் நாமத்தைத் துதிப்போம்
குஷ்டரோகத்தைக் குணமாக்கினாரே மரித்தோர் உயிர்த்தெழச் செய்தனரே பூரண சுகத்தை அளிப்பவர் இயேசு புவிதனில் உன்னைக் குணமாக்குபவரே
பாவங்கள் போக்கி பாவியாம் உன்னை பரிசுத்தம் செய்திடுவார் அவரே பரலோக ராஜ்ஜிய பதவிக்காக உன்னை பரிசுத்த ஆவியால் அபிஷேகித்திடுவார்
சுகமும் பெலமும் சந்தோஷமும் தர இயேசுவை நீ இன்று விசுவாசிப்பாய் அவர்தம் கிருபையால் நிறைத்திடுவாரே சுகத்துடன் வாழ அருள் புரிவார்