பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்
paridhi thoongida paadhiraa nerathil
பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில் பாரிடை பிறந்தவரே பாவங்கள் போக்கவும் சாபங்கள் நீக்கவும் தரணியில் பிறந்தவரே -- பரிதி தூங்கிட
1. மயில்கள் ஆடட்டும் குயில்கள் பாடட்டும் வானவர் வாயார வாழ்த்திடட்டும் தேவகுமாரா தாவிதின் மைந்தா தாழ்மையின் திரு உருவே தியாகத்தின் திருவடிவே
2. கனிகள் கனியட்டும் மலர்கள் மலரட்டும் பரமனின் பெருமை புகழ்ந்திடட்டும் மாட்டு கொட்டினில் மா பெரும் தேவன் மானிட நானாரே மாந்தரை மீட்டிடவே
3. மனிதர் மாறிடா மேன்மை பெற்றிட மீட்பர் நம் இயேசு பாரில் வந்தார் பாவியை மீட்க பரிசுத்த மாக்க பெத்தலையில் பிறந்தார் பரலோக மேன்மை விட்டார்