பறவைகள் விதைப்பதும்
paravaigal vidhaippadhum
பறவைகள் விதைப்பதும் அறுப்பதில்லை-தேவன் அவைகளை போஷிக்க மறப்பதில்லை (2) மறப்பதில்லை மறப்பதில்லை - தேவன் நம்மையும் மறப்பதில்லை (2)
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் - அதை தாங்கும் தேவன் மறப்பதில்லை (2) உற்றார் உன்னை வெறுத்தாலும் - தேவன் உடனிருக்க என்றும் மறப்பதில்லை (2) நரை முதிர் வயதிலும் மறப்பதில்லை - நம்மை நாள்தோறும் காக்க மறப்பதில்லை! (2)
தலைமுறைதலைமுறை மறப்பதில்லை - தாம் தெரிந்துகொண்டோரை மறப்பதில்லை வாழ்விலும் தாழ்விலும் மறப்பதில்லை - தம் வாக்குத்தத்தத்தை மறப்பதில்லை நீ என்னால் மறப்பதில்லை - என்று சொன்ன தேவன் மறப்பதில்லை
சிறியோர் பெரியோரை மறப்பதில்லை-அவர் செய்திடும் ஊழியம் மறப்பதில்லை ஒரு கலசம் நீரும் மறப்பதில்லை - நம் ஜெபத்தின் கண்ணீரும் மறப்பதில்லை ஊழிய அழைப்பை மறப்பதில்லை - உந்தன் உத்தமத்தை அவர் மறப்பதில்லை
பெலவீனத்தை அவர் மறப்பதில்லை - உன்னை பெலப்படுத்த அவர் மறப்பதில்லை உலகத்தை ஜெயித்தவர் மறப்பதில்லை - என்றும் உன்னோடிருக்க மறப்பதில்லை இத்தனை நல்ல இயேசுவை - இன்னும் நீதான் ஏனோ நினைப்பதில்லை