பரனே கருணைக் கடலே
paranae karunaik kadalae
பரனே கருணைக் கடலே நாம் தாழ்ந்த சமுத்திரமே
ஜெயம் ஜெயம் அதிசயம் ஜெயம் - மன பயம் கன்று நாம் பாடுவோம் ஆதி - ஜோதி - நீதியே
1. ஆயா தாம் மாது ஏவை செய்த தீதுகளுதியகற்ற நீதி வேதமோதி ஜீவனுாதி ஆதரித்தீந்தாயே ஆதி - ஜோதி - நீதியே - பரனே
2. பாவம் கோபம் சாபம் யாவும் தேவா ஈவாய் மேவினார் எவனோ நம்பினவனே ஜீவ னடைவா னெனவே கூவினார் ஜீவ - தேவ - தேவனே - பரனே
3. பாவமில்லை என்றால் பொய்யா பாவ அறிக்கை செய்தால் மெய்யாய் பாவம் மன்னித்தனியாயத்தை நீக்கி துய்யதாகவே நீதி - மோதி - உண்மையாம் - பரனே
4. பாவத்தை மறைப்போன் வாழ்வடையான் பாவத்தை யுரைப்போன் தாழ்வடையான் பாவ பாரம் தேவ கோபம் நீக்க மரித்தாரேசு தேவ - கோப் - மேற்றவர் - பரனே
5. சுத்த முகத்தை மறைத்த பாவத்தை சுத்திகரித்து எரித்த தெய்வத்தின் சுத்த புத்திர னேசு கிறிஸ்து சத்துரு பேயை ஜெயிதத்தால்பாடி - பாடி - போற்றுவோம் - பரனே
6. கனவில் நினைவால் மனதால் பின்னும் தினம் செய்வினை பாவ மெல்லாம் இனிமே லொரு காலம் நினையா தெனவே கடலிலெறிந்தாரேஞான - ரான - வானவ. - பரனே
7. ஓடி நாடி செய்த பாவம் கோடி கோடி யானாலும் கடலி னடியில் கூடத் தேடியும் காணக்கூடாதொரு நாளும் பாடிப் பாடிப் - போற்றுவோம் - பரனே