பரனாவியே அன்பின் ஆவியே
paranaaviyae anbin aaviyae
பரனாவியே அன்பின் ஆவியே நித்தம் எந்நாளும் என்னோடு வாழ்பவரே பலமாக என்னை நிரப்பும்
ஊற்றுமையா ஊற்றுமையா உன்னதரே ஊற்றுமையா பாத்திரம் நிரம்ப ஊற்றுமையா பரிசுத்தம் அடைய ஊற்றுமையா
1.மாம்சத்தின் தீயசெயல் சுட்டெரிக்க வானத்து அக்கினியே வந்திறங்கும் எலியாவின் தேவனே இறங்கியே வாருமே
2.ஆவிக்குள்ளாகி உம்மில் ஆனந்திக்க வேதத்தின் ஆழம் கண்டு சந்தோஷிக்க அநுக்கிரகம் வேண்டுமே அபிஷேகம் தாருமே
3.வல்லமை வரங்களை அள்ளித் தரும் வானத்தை நோக்குதையா எந்தன் உள்ளம் எழுப்புதல் வேண்டுமே எனக்கின்று தாருமே