பரம சேனைக்கும் பூலோகத்தாருக்கும்
parama senaikkum poologathaarukkum
1. பரம சேனைக்கும் பூலோகத்தாருக்கும் ஆண்டவரே அன்பு நிறைந்தவர் இரக்கமுள்ளவர் கிருபை செய்பவர் தேவரீரே.
2. மகிமைக்கென்றே இவ்வாலயத்தையே காணிக்கையாய் படைக்கக் கூடினோம் பிரதிஷ்டை செய்கிறோம் கொண்டாடி நிற்கிறோம் ஆனந்தமாய்.
3. உயர்ந்த வானமும் விசால பூமியும் நிறைந்து நீர் தயவைக் காண்பிக்க சபையைச் சந்திக்க இங்கே ப்ரகாசிக்க வந்தருள்வீர்.
4. ஊழியர் ஜனங்கள் செலுத்தும் ஜெபங்கள் மா தயவாய் இங்கே கேட்டருளும் கிருபை காண்பியும் கெட்டோரை ரட்சியும் வல்லமையாய்.
5. இப்போது இங்கேயும் பின் மோட்ச வீட்டிலும் உமக்கென்றே கனமும் துதியும் அன்புடன் நன்றியும் என்றென்றும் எழுப்பும் ஆண்டவரே.