பரம சீயோன் என் சொந்தமே
parama seeyon en sondhamae
பரம சீயோன் என் சொந்தமே என்று நான் காண்பேனோ என் இயேசுவை
பெருவெள்ள இரைச்சல் அல்லேலூயா தொனி சந்தோஷமாய் களி கூர்ந்திடவே துக்கமில்லை துயரமில்லை புதுப்பாட்டு பாடிடுவேன்
பனிரெண்டு வாசல் முத்துக்களாம் வீதிகளெல்லாம் பொன்னாகும் ஜீவ தண்ணீ ர் பருகிடவே பளிங்கு நதியோரம் சென்றிடுவேன்
வருவேன் என்றுரைத்தவர் வாக்கு மாறாதவர் பொங்குதே என் உள்ளம் மகிழ்ந்திடவே ஏங்கும் எந்தன் ஆவல் தீரும் இயேசுவின் மார்பினில் சாய்ந்திடுவேன்