பரம ராஜன் தங்கும் மகிமை
parama raajan thangum magimai
பரம ராஜன் தங்கும் மகிமை - பரலோகம் தூதர் பாத சேவை செய்யும் மாளிகை
பாரினிலே பார்க்க ொணாத பண்புடனிலங்கிடுதே பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், என்றொலியே - பரம்
1. சாவு பசி துக்கம் யில்லை அம்மாளிகையில் வாழுவோர் வஞ்சனையில்லை நாதரேசின் சேவை செய்தவர் நானிலத்தின் இன்பம் பெற்றோர் ஆனந்தமாய் ஆர்ப்பரி பார் அன்பர் முகம் கண்டிடுவாய் - பரம்
2. பக்தர் பரன் சாயலணிந்து - மகிழ்ந்து பாடி நற்சுதனின் பின்னே நடந்து பொன் மயமாய் விளங்கிடும் பொற்றளமாம் வீதிதனில் போற்றி, ஏற்றி ஆர்ப்பரிப்போம் பெண்ணின் முடி நாம் தரித்து - பரம
3. சுற்றி வர சிங்காசனங்கள் - சுதந்தரரின் சாற்றவொண்ணாச் சொர்க்க இன்பங்கள் ஜோதிலோகம் சேர்ந்திடலாம் ஜோதிமயமாகிடலாம் ஜெயகீதம் பாடிடலாம் ஜெயம் பெற்றோர் ஏகிடலாம் - பரம்
4. ஜீவ நதி ஓடும் நாடு து - இரவு பகல் இரண்டு மொன்றாய் தோன்றிடும் மங்கு இருளில்லா இன்ப நாடு அருளொளி வீசுமங்கு இன்பலோகம், இன்பலோகம் இன்னாலில்லா இன்பம். - பரம்
5. முத்து வாசல் பன்னிரண்டங்கே பிரபையுள்ள இரத்தத்தின் பொன் மண்டபங்கள் இயேசுநாதர் ஜோதியல்லால் வேறிலங்கும் ஏதுமில்லை நாமெல்லோரும் ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா