பரம எருசலமே
parama erusalamae
பரம எருசலமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4
எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய் பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே கனிவான எருசலேமே (2)
ஜீவ தேவன் நகரினில் குடி புகுந்தேன் சீயோன் மலைச் சீருக்கு சொந்தமானேன் நீதி தேவன் நிழலடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் மேலான எருசலேமே மேலான எருசலேமே(2)
சர்வ சங்க சபையினில் அங்கமானேன் சர்வ லோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்குக் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாம் தூதர்கள் சூழ நின்றேன் ஆஹா என் எருசலேமே ஆஹா என் எருசலேமே (2)
விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானே என்னும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் என்னில் வாழ்வதால் விடுதலையே சுயாதீன எருசலேமே சுயாதீன எருசலேமே (2)
கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மன நோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை தலைநகராம் எருசலேமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B Em G Am D Am C D G G B Em G Am D Am C D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G G Bm C Am D G G Bm C Am D G D G Am D G