பரலோகில் நமக்கு
paralogil namakku
பரலோகில் நமக்கு இடமுண்டு-என் பரிசுத்தர் நம்மை அழைத்ததுண்டு-(2)
1.கல்வாரி இரத்தம் என்னை மீட்டதுண்டு -என் கத்தரின் பாசம் என்னை இழுத்ததுண்டு கதியில்லா ஏழைகளை காத்ததுண்டு -என் கண்ணீரின் துயரத்தை துடைத்ததுண்டு –(2)
2.சோதனை வரும்போது பயப்படாதே என்றார் சோர்ந்து போகும் உனக்கு பெலன் கொடுப்பார் காத்திடும் கர்த்தர் உன்னை கரம்பிடிப்பார் என்று கவலைப்படாதே உன் கண்ணீர் துடைப்பார் –(2)
3.தூற்றி திரியும் மாந்தர்களை அவர் தூற்றுக் கூடையால் அவர் தூற்றிடுவார் கோதுமை மணியை சேர்த்திடுவார் பதரையோ அக்கினியால் சுட்டெறிப்பார் -(2)