பரலோகம் போக தனி வழி
paralogam poga thani vazhi
பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தல் எல்லாம் அங்க நடக்காது -2 கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2 பரலோகம் அம்மா பரலோகம் அக்கா பரலோகம் தங்கச்சி பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தல் எல்லாம் அங்கு நடக்காது
1. எல்லோருக்கும் வழிகாட்டும் இயேசு தாங்க தலைவரு எதிர்க்கட்சி யாரும் இல்ல நிரந்தரமா முதல்வரு -2 கலர்டிவி கிரைண்டர் எல்லாம் கட்சி தரும் விளம்பரம் -2 கர்த்தரை நீ ஏற்றுக் கொண்டால் எல்லா பொருளும் இலவசம் -2 கர்த்தரை நீ ஏற்றுக் கொண்டால் உலகில் எல்லா பொருளும் இலவசம் உனக்கு எல்லா பொருட்களும் இலவசம் கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2
2. பதவி என்னும் பலத்தகாட்டி குனிஞ்சி லஞ்சம் வாங்குற பணத்துக்கா ஆசைப்பட்டு துணிஞ்சு ஊழல் செய்கிற -2 லஞ்ச ஊழல் பணத்துலல்தான் வந்திடுமா நிம்மதி -2 பரலோகத்திலே இதுக்கு எல்லாம் இல்லையடா அனுமதி -2 பரலோகத்திலே இதுக்கு எல்லாம் இல்லையடா அனுமதி இல்லையடா அனுமதி -2 கட்சிக்கொடி கலர் கலரா அங்கே போக பறக்காது -2 கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வரமுடியாது -2
3. தனிமனிதன் யாருக்குமே இல்லையடா சுதந்திரம் வழியை விட்டு மாறி போனால் நரகம் தாண்டா நிரந்தரம் -2 திறந்த வாசல் இருக்குதடா கவலை இனி உனக்கு இல்ல -2 தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை -2 நியாயத்தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை தந்திடுவார் விடுதலை