பரலோக மகிமைதனை
paraloga magimaidhanai
பரலோக மகிமைதனை நான் பாடுவேன் கவிகளினால் கண்களால் காணாத காதுகள் கேட்காத கனவான்கள் தேசமதை
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனதூதர் பாடியே துதிக்கின்றனர் பாசமாய் பாட பாவியை மீட்டீர் பாவி நான் உமதடிமை பாடுவேன் தூதருடன்
மகிமையே மகிமையே மகிமையே என நானும் பாடியே துதிக்கின்றேனே ஜெயத்தின்மேல் ஜெயம்கொண்டு ஜெயகீதம் பாடிட ஜெகமதில் ஜெபித்திடுவேன் நான் ஜீவனை ஈந்திடுவேன்
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே கீதங்கள் கேட்கின்றாரே சுரமண்டல தொனிபோல யாருமே அறிந்திடா சங்கீதம் பாடிடுவேன் கீர்த்தனம் பண்ணிடுவேன்
வல்லமை மகிமை துதியும் கனமும் கிறிஸ்தேசு ராஜாவுக்கே தூதர்கள் பணிந்திட மூப்பர்கள் தொழுதிட மீட்பின் கீதம் பாடுவேன் மகிமையின் தேசத்திலே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்றுமே ஆயத்த படுத்தினாரே கைகளால் கட்டிடா அஸ்திபாரமுள்ள சிறப்புறும் தேசமதை மகிமையின் நகரமதை