பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே
parakkudhae jeyakkodi parakkudhae
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம் அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம்
கேட்குதே எங்கும் தொனி கேட்குதே அல்லேலூயா அல்லேலூயா - 2 ஜீவவார்த்தை என்றும் வழிநடத்தும் உன்னை வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை
வீசுதே அருள் மணம் வீசுதே அல்லேலூயா அல்லேலூயா - 2 இயேசு ராஜன் சேனை ஒசை முழக்கத்தோடு சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும்
ஊற்றுதே ஆவி மழை ஊற்றுதே அல்லேலூயா அல்லேலூயா - 2 ஆடிப்பாடும் கூட்டம் ஆர்ப்பரிக்கும் வேளை ஆனந்தத்தில் மகிழ உள்ளமெல்லாம் பொங்க