பஞ்சமா பாவம் தீர
panjamaa paavam theera
பஞ்சமா பாவம் தீர பிரபஞ்சம் தேடி வந்த நெஞ்சத்தின் கோமானை வாழ்த்திடுவோம் கொஞ்சிக் கொஞ்சிகுயில் கவிதைகள் பாடிட மின்மினி விண்ணிலே ஆடிடுதே மின்மினி தாளமிட்டு ஆடிடுதே
நவ நல சுந்தர பாலகனாய் நல்ல நீதியின் சூரியன் உதயமானார் நலிந்தோர் யாவரையும் மீட்க வந்தவரை கவியாம் பாடி கொண்டாடி போற்றுவோமே
சூரியன் சந்திரன் படைத்த இவர் தந்த பாரினில் ஓரிடம் தேடி வந்தார் தாரீரோ நீர் உள்ளம் பாலன் தங்கவே ஆரிரோ பாடி ஆனந்தம் கொள்ளவே
மண்ணிலும் விண்ணிலும் மகிபன் இவர் சுத்தானந்த இயேசுவை வாழ்த்திடுவோம் எண்ணிலா நன்மைகள் தந்திடவே என்னையும் உன்னையும் தேடிவந்தாரே