பள்ளத்தாக்கில் நடக்கும்போது
pallathaakkil nadakkumbodhu
பள்ளத்தாக்கில் நடக்கும்போது என்னை காண்பவரே தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே
என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே
ஆவியானவரே ஆவியானவரே
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கலங்க மாட்டேன் திகைக்க மாட்டேன் நீர் என்னோடு உண்டு
வார்த்தையாலே தேற்றுவீர் சமூகத்தாலே நடத்துவீர்
சோர்ந்து போகும் நேரத்தில் உம் பெலனை தருகின்றீர் சத்துவமில்லா வேளையில் அதை பெருக செய்கின்றீர்
பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன் புது பெலனடைந்திடுவேன் உயர பறந்திடுவேன்