பலவான்கள் கண்கள் முன்பாக
palavaangal kangal munbaaga
பல்லவி
பலவான்கள் கண்கள் முன்பாக பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர் - 2
பலகணிகள் திறந்து பரலோக பலத்தால் பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர் - 2
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம் கரங்களைப் பிடித்து உருவாக்குமே - உம்மை -2
தகுதியற்றவன் ஆனாலும் தகப்பனைப் போல அணைப்பவரே குழியில் தூக்கிப் போட்டாலும் குனிந்து தூக்கி எடுப்பவரே - 2
அலை கடல் என்னை எதிர்த்து வந்தாலும்-என் அஸ்திபாரமாய் இருப்பவரே - 2
குறைகள் என்னில் இருந்தாலும் குயவனைப்போல வனைபவரே உடைத்து நொறுக்கிப் போட்டாலும் உயிர்பெற ஜீவன் தருபவரே - 2
புரளும் வெள்ளங்கள் சூழ்ந்து நின்றாலும் என் புகலிடமாய் இருப்பவரே - 2
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம் கரங்களைப் பிடித்து உருவாக்குமே - 2
பல்லவி
பலவான்கள் கண்கள் முன்பாக பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர் - 2
பலகணிகள் திறந்து பரலோக பலத்தால் பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர் -2
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம் உம் கரம் கொண்டு உருவாக்குமே -2
உம் கரத்தால் எனை உருவாக்கு