பலமளித்தெம்மைப் புது
palamalithemmaip pudhu
பலமளித்தெம்மைப் புது வழிகளில் நடத்திடும் தாரகம் நீரல்லவோ
தாரணியிலெமக்குத் தயைபுரிந்திடும் இயேசு நாயகன் நீரல்லவோ
1. இருவரொருமித்து என் நாமத்திலே கூடும் வேளை சமூக மளிப்பேனென்றீரே உம் அருள் வாக்குபோல அளித்தீரே உம் சமூகம் உம்மை துதித்து மகிழ்வேன்
2. அதிசயமானவர் என்பது மறு பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே இது சமயமூமது இதயம் விரும்புவதை இறையே விளங்கச் செய்வீரே
3. பாவிகள் உம்மண்டை பாவ உணர்வடைந்து தாகமுடனடைந்திட நாவினறிக்கையினால் நவீன இதயம் பெற்று நசரேயனைப் பின் சென்றிட
4. கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை பலமாயுரைக்க வேணுமே நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து அலகை அடைக்க வேணுமே
5. வழி நடத்திட எம்மை வல்லமை யுள்ளவரே ஒளியாக முன் நடவுமே விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது களித்திட எம்மை காருமே