பக்தரே அண்ணாந்து பாரும்
paktharae annaandhu paarum
1. பக்தரே! அண்ணாந்து பாரும்! யேசு வெற்றி வேந்தராய் வானில் தோன்ற மாந்தர் யாரும் சேவிப்பாரே தாழ்மையாய்.
வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே! வாழ்க! வாழ்க!! என்றும் வாழ்க!!! வாழ்க! ராஜ ராஜரே!
2. தேவதூதர் முடிசூட்ட ராஜரீகம் செய்கிறார். யாவரும் ஜெய கீதம் பாட க்ரீடதாரியாகிறார்.
3. தீயரும் சக்கந்தமாக முடி சூட்டி வாழ்த்தினார் தூய தூதர் கூட்டமாக சேவித்தாரவாரிப்பார்.
4. பாரும் ராஜ அபிஷேகம்! ஆரவாரம் கேளுமே! யேசுவின் சர்வாதிகாரம் பூமி எங்கும் கூறுமெ.