பகற்காலம் இருக்கு மட்டும்
pagarkaalam irukku mattum
பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே ஒருவரும் கிரியை செய்யா ராக்காலம் வருமுன்னே அனுதினம் உழைத்திடுவேன் நான்
கண்களை ஏறெடுத்து பாருங்கள் விளைந்த வயல் நிலத்தை காணுங்கள் அறுப்பின் எஜமானே உம் சித்தமே இன்று நான் செய்ய ஆயத்தமே
நாடு நகரம் என்று நான் அலைந்திட காடு மேடு என்று பாய்ந்து சென்றிட இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட என்னை தந்துவிட்டேன் உம்கைகளில்
எமது சேவையார் செல்லுவார் என்று கேட்கும் தேவனின் சத்தம் என்னை அனுப்பும் என் இயேசுவே என்னை அர்ப்பணித்தேன்வழி காட்டுமே
இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள சாத்தானின் ஆளுகை அகன்று ஒழிய எலியாவின் ஆவியும் அதிகாரமும் என்னில் வந்திறங்க அருள் தாருமே