பகலும் ராவும் கர்த்தருடையது
pagalum raavum kartharudaiyadhu
1. பகலும் ராவும் கர்த்தருடையது இருள் சூழ்கையில் நம்மோடிருப்பாரே அவர் நிழலின் கீழ் இளைப்பாறுவோம் நாம் அவர் காப்பாற்றுவார்.
2. பயங்கள் யாவும் ஓடிப் போகும் முன்னே விடியுமட்டும் காத்துக் கொள்ளுவீரே ஆத்மா சரீரத்தை தீங்கினின்று காக்க தூதரை அனுப்பும்
3. பூமியில் எந்த தஞ்சமும் இல்லை படைத்த தேவனே எம்மை ரட்சியுமே உம் அன்பின் ப்ரசன்னம் விலகுவதில்லையே உம்மைத் தேடுவோர்க்கு.
4. போற்றிடுவோமே உம் இனிய நாமம் உம் சித்தம் செய்ய வேண்டிக்கொள்கிறோமே பாவத்தை மன்னித்து ஜீவனைத் தந்தருளி பாதுகாரும் தேவா.