படியேறி வருகின்றேன் தேவா
padiyeri varugindren devaa
படியேறி வருகின்றேன் தேவா என்னை பலியாக்க வருகின்றேன் தேவா நான் படியேறி வருகின்றேன் தேவா
மகனையே பலியாகக் கேட்டால் - அபிரகாம் மனமார பலியாக்க வந்தார் மனதினை மாசின்றி கேட்டாய் - நான் மகிழ்வோடு தருகின்றேன் உனக்கே
ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை நீ வேண்டும் வாவென்று சொன்னாய் பிழை செய்து நான் வாழ்ந்த போது தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய