பதிலுண்டா? பதிலுண்டா
padhilundaa? padhilundaa
பதிலுண்டா? பதிலுண்டா? ஜெபித்த உனக்குப் பதில் உண்டா? பதில் வரா ஜெபம் உண்டானால் பதறாதே பதில் உண்டுனக்கு.
1. அழுது ஜெபித்த உன் ஜெபத்தை ஆண்டவர் அலட்சியம் செய்யார் நம்பிக்கை யற்று நடுங்காதே நாளும் பொழுதில் பதில் தருவார்.
2. பாதையில் பதித்த விசுவாசம் பயனற் றென்றும் போகாதே அடிக்கும் புசல்கள் அணைத்தாலும் அது ஒரு நாளும் அணையாதே.
3. கானான் பார்க்க ஆசித்து கோனான் மோசே கெஞ்சினதால் பூமான் யேசு மா மலையில் பூர்த்தியாய் அளித்தார் எந்நாளும்.
4. பவுலாம் நல்ல அப்போஸ்தலர் பரிந்து கெஞ்சினார் குறை நீங்க கிறிஸ்து பகவான் கீர்த்தி பெற கிருபை அளித்தார் எந்நாளுமே.