படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
padaippu ellaam umakke sondham
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் நானும் உந்தன் கைவண்ணம் குயில்கள் பாடும் கிளிகள் பேசும் என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே ( 2 )
இயற்கை உனது ஒவியம் இணையில்லாத காவியம் - 2 அகிலமென்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் - 2 உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே - 2
இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் , வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே - 2 தந்தேன் என்னை தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடுதான் ( 2 )