படைக்கிறோம் இச் சேயை
padaikkirom is seyai
படைக்கிறோம் இச் சேயை ஒப்படைக்கிறோம் பாலகனை
கர்ப்பத்தின் கனி இது கர்த்தரின் கிருபை ஆதியின் வார்த்தை அனைவரின் பாக்கியம்
1. உடையுணவும் உறையூளும் பெற்றே குன்றின் விளக்காய் விளங்கட்டும் உனக்காய் காட்டுப் புஷ்பம் போன்றும் கடலாடும் மச்சம் போன்றும் இனிது வாழ்ந்திட இறையருள் வேண்டியே
2. மானிட அறிவு கடுகான அறிவு மந்தை பாவம் நிந்தையைப் போக்கியே கல்வி தேர்ச்சியும் கலையுடை யுணவிலும் கண்ணிமை போல் காத்திட வேண்டியே.
3. அறிவினில் தேர்ச்சி ஞானத்தின் எழுச்சி பார் புகழ் ஞானி சாலொமோன் போல நற் சுகமும் நீண்ட நாள் வாழ்வையும் நாடோறும் பெற்றிட நின் அருள் வேண்டியே.