பாய் பாய் சொல்லும் காலம்
paay paay sollum kaalam
பாய் பாய் சொல்லும் காலம் (Bye Bye) சொல்லும் காலம் நெருங்கிடுதே உலகின் முடிவு கண்ணில் தெரிகிறதே என் இயேசு ராஜன் வருகை மிக சமீபமே
ஓ... ஓ... ஆனந்தமாக ஆடிப் பாட ஆயத்தமா நீயும் ஆயத்தமா
கண்ணில் காணும் காட்சி எல்லாம் கடந்து போய்விடும் உலகின் ஆசை பாசம் எல்லாம் அழிந்துவிடும் இயேசுவின் அன்பு ஒன்று மட்டுமே இறுதிவரையில் நிலைத்து நிற்குமே - இன்று நடப்பது எல்லாம் இதனை தானே அடித்து சொல்லிடு
இயேசு சொன்ன வார்த்தை யாவும் சரியாய் நடந்திடுதே கிருபை நாட்கள் கடந்து போகும் வேளை வரும் முன் இதயத்தில் அவரை ஏற்றுக் கொள்ளவே அன்பாய் உன்னை அழைக்கிறாரே - உன் வாழ்வினை தந்தால் எல்லா நாளும் இன்பம் பொங்குமே
வானமீதில் தூதர் சூழ நினையா நேரத்திலே ராஜா ராஜன் நம்மை சேர்க்க மீண்டும் வருவாரே பாவத்தில் வாழும் மாந்தரின் நிலைமை ஐயோ ஐயோ மிகவும் வேதனை - அவர் நியாயத்தீர்ப்பின் நாளை யாரும் சகிக்க முடியாது