பாவியை மீட்கப் பாரினில்
paaviyai meetkap paarinil
1. பாவியை மீட்கப் பாரினில் வந்த பரிவு தானிதோ பாலகனாகி ஆவடை குடிலில் பார்த்திபன் அரசே ராஜ - கோல மிதுவாமோ தேவ - கோலமிதுவாமோ - தினம் தோத்திரம்
தினம் தோத்திரம், தோத்திரம், தோத்திரமே செய ராஜனாய் வந்த தேவனுக்கே
2. ஆதியிலே பிதாவுடனிருந்த அற்புத வார்த்தை இதோ ஏதுமற்ற ஒரு பாலகனாய் மாதிரி மீதினிலே ஐயா ஏங்கியழுதிடவோ புல்மீ - தேங்கியழுதிடவோ - தினம்
3. மானிடரெவரும் காணவொண்ணாதே மகிமையின் நித்தியரே கால்நடை ஆயரும் கண்டு களிக்க காட்சியீந்தீரோ ஏழை - மானிடர் மீதன்போ பரனே - மானிடர்மீதன்போ - தினம்
4. மரண பயத்தால் அடிமையாகி மாண்டு கிடந்த என் அரவணைத்தேயும் ஜீவனையீந்திட அடிமையானீரோ இயேசுவே - அதிசயம் தன்றோ யாருக்கும் - அதிசயம் தன்றோ - தினம்
5. உழையும் சேற்றினில் அலைந்த பாவமுதன் ஏனைய துரோகம் செய்து தூஷித்த இந்த தோஷியை ஏனைய குருவே - தேடினதேனையா எனையும் - தேடினதேனையா - தினம்
6. விண்டலமெல்லாம் தாழ்மையினாலே விடுத்து வந்தாலும் அண்ட சராசர வகிலமுமின்று அகமகிழ்வதென்னே ஐயா - ஆனந்தங் கொள்வதென்னே பாவியும் - ஆனந்தங் கொள்வதென்னே - தினம்