பாவியே நீ போகும்போது கூட
paaviyae nee pogumbodhu kooda
பாவியே நீ போகும்போது கூட வருவதென்ன கூட வருவதென்ன கொண்டு நீவந்ததென்ன
ஆடு மாடு நன்செய் புன்செய்வீடு வாசல் தான் வருமோ பாடு பட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ
உத்தியோக மதிப்புகளும் பி . ஏ . எம் . ஏ பட்டங்களும் மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ
தேடு நீ கண்டடைவாய் தட்டு திறப்பேனென்றார் கேளு கொடுப்பேனென்றார் கேட்டவரம் தருவார்
மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி ஞாமமாய்த் தீர்ப்புச் செய்தார் ஞானி சாலொமோன் தானே