பாவி உன் மீட்பர் கரிசனையாய்
paavi un meetpar karisanaiyaay
1. பாவி உன் மீட்பர் கரிசனையாய் அழைக்கிறார்! அழைக்கிறார்! அலைந்து திரிந்து ஏன் கெடுவாய் யேசுவின் ரட்சிப்பைப் பார்.
அழைக்கிறார்! அழைக்கிறார்! விரும்பு வருந்தி உந்தனை அழைக்கிறார்.
2. இளைத்தும் தவித்தும் போனவனை அழைக்கிறார்! அழைக்கிறார்! நம்பிக்கை யோடவர் சரணத்தை சேருவாய் தள்ள மாட்டார்.
3. தாமதமின்றி இந் நேரத்தினில் வந்திடுவாய்! வந்திடுவாய்! பாவமுமற உன் நெஞ்சத்தினில் வாழ்வையும் பெற்றிடுவாய்.
4. விரும்பி வருந்தி அழைக்கிறார் ஓடியே வா! ஓடியே வா! வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார் உடனே உடனே வா!