பாவத்தின் பாரமதை
paavathin paaramadhai
பாவத்தின் பாரமதை சுமந்த என் மீட்பரே பாவி நான் என்ன செய்ய உந்தன் தயை நாடினேன் - 2
பாடுகள் எத்தனை அத்தனையும் - 2 பாதகன் எனக்காய் ஏற்றுக்கொண்டீரோ - 2 - பாவத்தின்
1. பூப்போன்ற உந்தனின் சரீரமதிலே பூத்திட்ட ஆணிகளால் தளர்ந்திட்டதல்லவோ - 2 யூதாவின் ராஜா முட்க்ரீடம் உமக்கோ - 2 பரிசுத்த ரத்த வேர்வை எனக்காக சிந்தினீரோ - 2 - பாவத்தின்
2. உம்மோடு அன்று பொல்லாத கள்வனை பரதீசியில் இன்று இருப்பாய் என்றுரைத்தீர் - 2 அப்பெரும் பாக்கியம் எந்தனுக்கிட்டதோ - 2 பரிதவித்தே உந்தன் க்ருபை என்றும் வேண்டியே - 2 - பாவத்தின்
3. சிலுவை மரத்தில் சாவை வென்றீரே சிந்தின ரத்த துளிகள் பாவமெல்லாம் நீக்கிற்றே - 2 சிறியவன் என்னையும் உந்தனின் பனிக்காய் - 2 சிரமதை தாழ்த்தி உமக்கென்றும் அற்பணிப்பேன் - 2 - பாவத்தின்