பாவப் பாரமே கொண்டு துர்க்குணத்தால்
paavap paaramae kondu thurkkunathaal
1. பாவப் பாரமே கொண்டு துர்க்குணத்தால் நிறைந்து சாப இருளில் நஷ்டத்தை அடைந்தேன். இன்ப சத்தத்தைக் கேட்டு யேசுவண்டையே செல்வேன் அன்பாகவே இளைப்பாறுதல் தந்தார்.
பல்லவி
க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை.
2. தினம் போகிறேன் அங்கே புது ஜீவன் பெறவே இலவச க்ருபையாலே சந்தித்தார் ரூடவ்னச் சோதனை வந்தால் அதை ஜெயித்திடவே மனத் தாழ்மையான ஜெபத்தைச் செய்வேன்.
பல்லவி
க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை.
3. ஜீவயத்தில் வறட்சி வந்து வாதிக்கும்போது ஆவியாலே சிலுவையை நோக்குவேன்! பாவிக்காகவே யேசு பட்ட பாட்டைப் பார்க்கையில் மேவிச் சுமக்க பெலனை அடைவேன்.
பல்லவி
க்ருசண்டை க்ருசண்டை குற்றம் குறையெல்லாம் குலைத்தே விட்டார் எல்லாப் பாவம் நீங்கின இருள் ஒளியாயின ஏற்றுக் கொண்டேன் யேசுவைக் க்ருசண்டை.
4. ஆத்மா அங்கலாய்ப்பிலே அவர் பக்கமே நிற்பேன் அந்தோ அடியேனுக் காறுதல் செய்வார் ஒப்புக் கொடுப்பாயானால் ஜீவனையே பெறுவாய் எப்பொழுதுமே தப்பாமல் இருப்பாய்.