பாவப் பாரம் நீங்க மனதுண்டா
paavap paaram neenga manadhundaa
1. பாவப் பாரம் நீங்க மனதுண்டா? யேசு ரத்தத்தில் பெலன் உண்டு தீமையை வென்று நீ ஜெயிப்பாயா? இரத்தத்தில் சக்தி உண்டு.
வல்லமை அற்புத வல்லமை மீட்பரின் ரத்தத்தில் வல்லமை அற்புத வல்லமை ஆட்டுக்குட்டியின் ரத்தத்தில்.
2. துர் இச்சை அகந்தை வெல்லுவாயா? யேசு ரத்தத்தில் பெலன் உண்டு கல்வாரி ஊற்றில் நீ மூழ்குவாயா? இரத்தத்தில் சக்தி உண்டு.
3. தூய வெண்மையாக விருப்பமா? யேசு ரத்தத்தில் பெலன் உண்டு கறை யாவும் தீரும் ஜீவ ஊற்றில் இரத்தத்தில் சக்தி உண்டு.
4. யேசு உன் ராஜனை சேவிப்பாயா? யேசு ரத்தத்தில் பெலன் உண்டு தினம் துதி பாடி ஜீவிப்பாயா? இரத்தத்தில் சக்தி உண்டு.