பாவம் பெருகுதே பாரும்
paavam perugudhae paarum
பாவம் பெருகுதே, பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே
ஆத்தும ரட்சிப்பிழந்தவர் ஆயிரமாயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே
இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்.
தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார்
ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன் ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார்
வெறுங்கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆசீர் பொழிந்தனுப்பும்
எமது காரியமாகவே யாரை அனுப்பிடுவேன் என்றவர் அழைக்கும் இன்ப சத்தம் என்னுள்ளம் தொனிக்குதே
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal