பார்வை பெற வேண்டும்
paarvai pera vendum
பார்வை பெற வேண்டும் - நான் பார்வை பெற வேண்டும் என் உள்ளம் உன் ஒளிப் பெற வேண்டும் பார்வை பெறவேண்டும் நான் பார்வை பெற வேண்டும் வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும் - புதுப் பார்வை பெற வேண்டும் ( 2 )
நாளும் பிறக்கும் உன் வழியைக் - காணும் பார்வை தரவேண்டும் ( 2 ) உன்னாலே எல்லாமுமே ஆகும் நிலை வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்
நீதி நேர்மை உணர்வுகளை நான் பார்க்கும் வரம் வேண்டும் உண்மை அன்பு உயர்ந்திடவே உழைக்கும் உறுதி தரவேண்டும் ( 2 ) எல்லோரும் ஒன்றாகவே வாழ வழி வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்