பாருக் ஹபா பிஷெம் அடோனை Baruch Haba B’shem
paaruk habaa pishem adonai Baruch Haba B’shem
பாருக் ஹபா பிஷெம் அடோனை (Baruch Haba B’shem Adonai) -4 பாருக் ஹபா பிஷெம் அடோனை (Baruch Haba B’shem Adonai) விரைந்து வாருமே மேசியாவே பாருக் ஹபா பிஷெம் அடோனை (Baruch Haba B’shem Adonai) தேசத்தை விடுவியும் மேசியாவே
1. தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் பெருகிடுதே ஒற்றுமை அன்பு குறைந்திடுதே கசப்பும் வளர்ந்திடுதே – 2 இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே ஜெபங்கள் பெருகிடுதே தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே சேனைகள் எழும்பிடுதே – 2
2. சேனையின் கர்த்தர் நம் நடுவில் ஆளுகை செய்திடவே திறப்பிலே நின்று ஜெபித்திடவே திரள்கள் எழும்பிடுதே – 2 ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே சிலுவையின் கொடி நம் தேசத்திலே சீக்கிரம் பறந்திடுமே