பார்ப்பேனே என் நேசரே நான்
paarppenae en nesarae naan
பார்ப்பேனே என் நேசரே நான் ஆர்ப்பரிப்பின் நானும் அந்நாள் தீர்த்தார் என் கண்கள் யாவும் சாற்றுவேன் நான் துதியே துதியை
1. பாரில் எந்தன் பாவம் தீர்த்தார் பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார் அகத்திலே சந்தோசமளிப்பார் இகத்திலென்றும் துதியே துதியே
2. ஆயிரங்களில் சிறந்தோர் ஆத்துமாவின் நேசர் அவர் ஆபத்திலென் தோழனவர் நாமத்திற்கு துதியே துதியே
3. எண்ணிறந்த தூதர் கூட்டம் விண்ணினின்று போற்றும் நாளில் அண்ணல் இயேசின் அடி பணிந்து பணிந்து செல்வேன் துதியே துதியே
4. மண்ணின் சாயல் மாறினாலும் மகிமை ஏறி மாசற்றோனாய் மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே துதியே