பார்க்குருசில் பரலோக ராஜன்
paarkkurusil paraloga raajan
பார்க்குருசில் பரலோக ராஜன் பாதகனைப் போல தொங்குகிறார் பார் ! அவர் திரு இரத்தம் உன் பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே
வந்திடுவாய் இயேசுவண்டை வருந்தி அழைக்கிறாரே வாஞ்சைகள் தீர்ப்பவரே - உன் வாதைகள் நீக்குவார்
இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யான இளைப்பாறுதலை அளித்திடுவாரே இன்னுமென்ன தாமதமோ இன்றே இரட்சிப்படைய வருவாய்
சிலுவையின் மீதில் சுமந்தார் உன் சாப ரோகங்கள் தன் சரீரத்தில் சர்வ வல்ல வாக்கை தம்பி சார்ந்து சுகம் பெறவே வருவாய்
நித்திய வாழ்வு பெற்றிட நீயும் நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய் நீ சென்று தள்ளாதுன்னை நீதியின் பாதையில் சேர்ந்திடுவார்
இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம் இன்பம் அவரின் அந்தரத்தின் மொழிகள் இல்லையே இந்நேசரைப்போல் கெம தில் வேருேர் அன்பருனக்கே