பாரிடத்தில் நாடி நம்மைத்
paaridathil naadi nammaith
பாரிடத்தில் நாடி நம்மைத் தேடி வந்த இயேசுவை பாடிப் பாடி துதி சாற்றுவோம் மேசியாவுக்கோ இந்த நீசக் குடிலோ ஓசன்னா! ஓசன்னா!! உன்னதத்திலே
1. அன்பினைப் பாருமே தேவனின் செயலே மாணவர் பாவம் சுமப்போர் தேவாட்டு குட்டியாய் - மெய்யான பலியாய் ஜீவன் வைத்திடவே - வந்தனரே - பாரி
2. சாவையும் நோவையும் பேயையும் யாவையும் மாய்த்திடும் அதிபதியே கல்வாரி தனிலே - தொல்லுலகோருக்காய் அல்லல்களுறவே - நினைந்தவர் - பாரி
3. சீயோனில் ராஜனாய் வீற்றிட உற்றார் சேயனாய் வரவென்னவோ அன்பினாலல்லவோ - இந்நிலையாகவோ மன்னுருவாகவே தெதிந்தாரே - பாரி
4. தம்மைப்போலாக்கவே நம் துயர் போக்க இம்மையில் இறங்கினார் கண்ணீர் பெருகுதே - அவனை யெண்ணியே கொண்டு உள்ளம் நன்றியால் - சேவிப்போம் - பாரி
5. இன்னும் இவ்வுலகில் நாமே துமில்லையே இன்பராம் இயேசுவின்னியே போதும் அவ்வன்பிதே - நம் ஜீவன் யாவுமே நாதன் அவருக்கே - சொந்தமன்றோ - பாரி