பாரீர் பரம் பொருளே
paareer param porulae
பாரீர் பரம் பொருளே பாரினில் பாவி என்னை-2 சேர்த்தீர் உமது நீரே கரத்தில் தூயவராம்-2 -2
1. பாவம் நிறைந்த லோகம் நான் வாழும் பூலோகம் - 2 யாவும் சாந்த மயம் உம் திரு பரலோகம் - 2 மாசறு மணிமுடி மீட்டருள் வாழ்பவரே தாசரே தயை செய்வீர் நீசராம் எமை பொருப்பீர்
2. காலம் உம்மையே வணங்கும் கருணை செய்பவரே - 2 கவலை மாற்று முகம் கர்த்தரே உமது முகம் -2 ஆலய மதி ஒளி உம் கையில் வைப்பவரே பாவியாம் எனை மீட்டு மந்தையில் சேர்ப்பவரே