பாரீர் கெத்சமனே
paareer kethsamanae
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே
தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே
அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே
மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே
அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்
என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G B Em D G G G7 C D Am D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G