பாரீர் அருணோதயம் போல்
paareer arunodhayam pol
1. பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம் பதினாயிரங்களில் சிறந்தோர்
2. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம்
3. அவர் இடது கை என் தலைகீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கொடி நேசமே
4. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்
5. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்லுவேன் அந்நேரமே
6. நாம் மகிழ்ந்து துதித்துடுவோம் ஆட்டுக்குட்டியின் மண நாளிலே சுத்தப் பிரகாச ஆடையோடே பறந்திடுவோம் நாம் மேகத்திலே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D D Bm D D G D D Bm A D D Bm G D Bm A D A D D G D D Bm D D G D D Bm A D D G D D Bm D D G D D Bm A D D G D D Bm D D G D D Bm A D D G D D Bm D D G D D Bm A D D G D D Bm D D G D D Bm A D