பாரக் குருசில் பரலோக ராஜா
paarak kurusil paraloga raajaa
1. பாரக் குருசில் பரலோக ராஜா பாதகனைப் போல தொங்குகிறார் பார்! அவர் திரு இரத்தம் உன் பாவங்கள் போக்கிட பாய்ந்திடுதே
வந்திடுவாய் இயேசுவண்டை வருந்தி அழைக்கிறாரே வாஞ்சைகள் தீர்ப்பவரே வாதைகள் நீக்குவார்
2. இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான இளைப்பாறுதலை அளித்திடுவாரே இன்னுமென்ன தாமதமோ இன்றே இரட்சிப்படைய வருவாய்
3. சிலுவையின் மீதில் சுமந்தார் உன் சாப ரோகங்கள் தன் சரீரத்தில் சர்வ வல்ல வாக்கை நம்பி சார்ந்த சுகம் பெறவே வருவாய்
4. நித்திய வாழ்வு பெற்றிட நீயும் நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய் நீசனென்று தள்ளாதுன்னை நீதியின் பாதையில், சேர்த்துவிடுவார்
5. இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம் இன்பம் அவர் அதரத்தின் மொழிகள் இல்லையே இந்நேசரைப் போல் இகமதில் வேறோர் அன்பருனக்கே