பார் நேசரேசுவை
paar nesaresuvai
பார் நேசரேசுவை கேள் அவர் இன்ப சத்தம் பேர் சொல்லி அழைத்தார் உன்னை அவர் இப்பாரினில் உன்னை தம் சொந்தமதாய்
1. காவினில் உன்னை கண்டெடுத்தே கழுகியே தூய உதிரத்தால் "ஆவியால் முத்தரித்தேனே, பார் நீயும் என் சொந்தமானாயே" என்றனரே
2. வா என்னுடனே சார்ந்தென்னிலே யாரும் இல்லை உனக்கென்னையல்லால் எந்தனடிகள் பின் தொடர் அன்பால் உன்னை இழுத்திட்டேன் என்றனரே
3. கன்மலையின் வெடிப்பிலே கண்ணீர் நிறைந்த உன் கண்களின் உந்தன் உருகும் ஜெபங்கள் தானும் கேட்கவே ஆவலாய் நிற்கிறாரே
4. அன்பு கூர்ந்து னில் தன்னை தானே தந்தானே முற்றுமாய் உனக்கென்றே மாசு கறைகள் குறைகள் மாற்றி தூயதோர் சபையாய் நிறுத்திட
5. சீயோன் எருசலேம் நீயே சீர்மிகு ஷோபனா உத்தமியே சேர்ந்து ஆளுகை தந்திடவே சீயோன் ராஜன் இதோ, வேகம் வருகிறார்!