பார் என மகனிப்பாடே
paar ena maganippaadae
பார் என மகனிப்பாடே உனக்காக ஆ - ஆ - ஆ - என் மகனே சகித்தேன் உனக்காக
1. இனியேனோ தினமும் தீதாய் போகிறாய் இனிய இவ்வழைப்பையே வீணாய் களைவாய் இனிமேல் செய்வேனெனவே சொன்னாய் இனியும் உனையே நீ வஞ்சித்தாய் - பார்
2. பாவ பாரம் உனையே பாழாக்கிறதே நவ நவ இன்பமும் நயங் காட்டுகிறதே நய வசனிப்பால் ஏமாற்றுகிறதே நலமே மகனே செவி சாயாதே - பார்
3. அழிவே உனையே அடுத்து நிற்கிறதே அனுதினம் உனையது பயங்காட்டுகிறதே ஆ! ஆ! வந்திடு அருமை மகனே வா வா உனையே ஆதரித்திடவே - பார்
4. கிருபைக் காலம் விரைவாயப் போகும் அருமையாமுன் ஆத்ம மீட்பும் துரிதமா யென்னண்டை சேரும் அணைப்பே னுணையே நானே இன்றும் - பார்