பார் அண்டம் மிளிர்க்குது
paar andam milirkkudhu
பார் அண்டம் மிளிர்க்குது பூமி குடி சிரிக்குது பார் போற்றும் மன்னன் இயேசு ராஜன் பிறந்தாரு
தந்தன தந்தன தோம் தான தந்தன தோம் இயேசு ராஜன் பூமியில் உதித்தாரு தந்தன தந்தன தோம் தான தந்தன தோம் இயேசு ராஜன் உள்ளத்திலே உதித்தாரு
1. ஏழை கோலமாய் மனிதருள் மாணிக்கமாய் மாட்டு தொழுவத்தில் மாமன்னன் பிறந்தாரு அன்பை பொழியவே அடிமையை மீட்கவே அன்னை மரியின் மகனாய் உதித்தாறு ஏற்ற தாழ்வினை எங்கும் நீக்கவே உலகிலெல்லாம் அமைதியை நிலைக்கவே நித்திய வாழ்வினை நமக்கு அளிக்கவே ஆட்டுகுட்டியாய் ஆண்டவர் பிறந்தாரு...
2. மேய்ப்பர்கள் மத்தியில் உதித்த பேரொளி நற்செய்தி முழக்கத்தை ஒன்று பாடிட இருளில் உள்ளவர்க்கு வெளிச்சம் அளித்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரு வான சாஸ்திரீகள் வணங்கி பணிந்திட பூமியின் ராஜியங்கள் கண்டு நடுங்கிட தூதர்கள் கூட்டமும் போற்றி பணிந்திட வானாதி வானவர் மனுரரூபம் எடுத்தாரு