பாலியர் சங்கத் தோழர்களே
paaliyar sangath thozhargalae
பாலியர் சங்கத் தோழர்களே! பரனேசையனைத் துதித்திடுவோம்.
பாலரை அவர் திருக்கரமெடுத்து பண்பாய் அணைத்தாசீர்வதித்தார்.
1. பெற்றோருக்குக் கீழ்ப்படிந்தார் பிரியம் போல நடந்து கொண்டார் முற்றிலுமவர் அடிச்சுவடுகளை முன்மாதிரியாய்க் கொண்டு செல்வோம்.
2. தேவாலயத்தை மிக ஆசித்தார் தேவ வசனத்தை வாசித்தார் ஆவலாய் அவர் திருவடி தொடர்ந்தே அதுபோல செய்வோம் அகமகிழ்ந்தே.
3. ஞானத்திலும் தேவ தயவிலுமே நாதன் வளர்ந்தார் அனுதினமே வானபரன் அருள் கிருபையினால் மலையாதவர் திருவடி தொடர்வோம்.
4. பாலியர் நம்மையும் நேசிக்கிறார் பாவ மன்னிப்பு அருளுகிறார் மேலுலகந் தர விரும்புகிறார் விலகா தவர் திருவடி தொடர்வோம்.