பாலைவனத்தின் நீரோடை போல்
paalaivanathin neerodai pol
பாலைவனத்தின் நீரோடை போல் புதுகிருபை கர்த்தர் பொழிந்தாரே இத்தனை நன்மை எனக்களித்தாரே கர்த்தரை நான் என்றும் மறவேனே
1. ஆத்துமாவே! என் முழு உள்ளமே ! ஆண்டவரை என்றும் ஸ்தோத்தரிப்பாய் காலையிலே துதி பாடல்களே கல்வாரிமீதில் தேவன்பு பொங்க கருத்துடனே கவி பாடிடுவாய்
2. தாழ்ந்தவனை தாம் உயர்த்திடுவார் சோர்ந்தவனை தாமே தேற்றிடுவார் அன்பு நிறைந்தவர் இயேசுவே அசையாத வாழ்வில் விசுவாச சேவை அனுதினமும் உயர்ந்தோங்கிடுதே
3. ஜீவத் தண்ணீரின் ஊற்றண்டையில் ஜீவன் அடைந்தே என் தாகந்தீர்த்தேன் ஜீவன் வழி சத்யம் இயேசுவே ஜீவாசீர்வாதம் தேவனின் பாதம் ஜெயமாகவே என்றும் பெற்றிடுவேன்
4. இத்தரை யாத்திரை முடிந்திடவே இயேசுவின் பொற்பாதம் சேர்ந்திடுவேன் என்ன பேரின்பம் தேவ சமூகம் என தாண்டவர் முகம் கண்டிடுவேன்